Honor 8C ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமாகும் திகதி வெளியானது

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஹுவாவி நிறுவனமானது தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Honor 8C இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக கடந்த மாதம் அறிவித்திருந்தது.

இதன்படி இம் மாதம் 29 ஆம் திகதி இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியானது 6.26 அங்குல அளவு, 1520 x 720 Pixel Resolution உடைய IPS LCD தொழில்நுட்பத்தினைக் கொண்ட HD+ திரையினைக் கொண்டுள்ளது.

இதனுடன் Qualcomm நிறுவனத்தின் Snapdragon 632 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 256GB வரை அதிகரிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராக்கள், 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers