முன்கூட்டியே விற்பனைக்கு வரும் ஒப்போ எப்19 சீரிஸ்! எங்கு தெரியுமா?

Report Print Kavitha in மொபைல்
0Shares

ஒப்போ நிறுவனத்தின் எப்19 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி மார்ச் மாதம் ஒப்போ எப்19 மற்றும் ஒப்போ எப்19 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் புதிய ஒப்போ எப்19 சீரிஸ் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ எப்17 சீரிசின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய ஒப்போ எப்19 சீரிஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் ஜூம் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என்றும் இது 10x ஜூம் வசதியை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

இரு ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் மற்றும் இதர ஆன்லைன், ஆப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

இருப்பினும் இந்த இரு புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி ஒப்போ சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்