உலகிலேயே பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்து குடிமக்கள் மகிழ்ச்சியாக உள்ள நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சமுதாய உதவி, சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் அற்ற அரசு, வன்முறை இல்லாத சமுதாயம் மற்றும் நோய்கள் இல்லாத சூழல் போன்ற சிறப்பு அம்சங்களின் அடிப்படையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
உலகம் முழுவதும் 157 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் முதல் இடம் பிடித்துள்ளது.
உலகளவில் மகிழ்ச்சியான 10 நாடுகளின் பட்டியல்
- டென்மார்க்
- சுவிட்சர்லாந்து
- ஐஸ்லாந்து
- நோர்வே
- பின்லாந்து
- கனடா
- நெதர்லாந்து
- நியூசிலாந்து
- அவுஸ்ரேலியா
- சுவீடன்
இதே பட்டியலில் அமெரிக்கா - 13, ஜேர்மனி - 16, பிரித்தானியா - 23, பிரான்ஸ் - 32, ரஷ்யா - 56 ஆகிய இடங்களை பிடித்துள்ளது.
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஆசிய நாடுகளான இலங்கை 117- வது இடத்திலும் இந்தியா 118-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.