7 வயது சிறுமி கற்பழித்து கொலை: தன் குழந்தையுடன் நியாயம் கேட்ட செய்தி வாசிப்பாளர்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

பாகிஸ்தானில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கசூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஷாயினப், இச்சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கமெராவில் நடுத்தர வயது நபர் ஒருவர், சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது.

மேலும் பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய பின்னரே, படுகொலை செய்யப்பட்டதாக உறுதிபடுத்தப்பட்டது.

இதனைத் தொடந்து சிறுமியின் மரணத்திற்கு காரணமான குற்றவாளியை, உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து பாகிஸ்தானின் செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் பெண்ணொருவர், தனது குழந்தையுடன் தொலைக்காட்சியில் தோன்றியுள்ளார்.

ஒரு தாயாக அச்சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை தான் எவ்வாறு உணர்வதாக, தனது குழந்தையை அரவணைத்தபடியே பதிவு செய்துள்ளார்.

தனது வேதனையையும், வலியையும் அவர் பதிவு செய்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்