50 பேரை பலிகொண்ட நேபாள விமான விபத்துக்கு காரணம் இதுதானாம்: வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
491Shares
491Shares
lankasrimarket.com

நேபாளத்தில் 50 உயிர்களை பலிகொண்ட விமான விபத்துக்கு காரணம் கட்டுப்பாட்டு அறையுடன் விமானிக்கு ஏற்பட்ட தவறான புரிதலே என தெரிய வந்துள்ளது.

நேபாள தலைநகர் காட்மண்டூவில் 71 பேருடன் பயணித்த யுஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் விமான நிலையம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 50 பயணிகள் சம்பவயிடத்திலேயே பலியாகினர்.

இந்த விபத்து தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைக்கு பின்னர், விமான கட்டுப்பாட்டு அறைக்கும் விபத்துக்குள்ளான விமானிக்கும் இடையே நடந்த கருத்து பரிமாற்றத்தில் ஏற்பட்ட தவறான புரிதலே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

காட்மண்டுவில் உள்ள ஒற்றை ஓடு தளத்தில் எந்த திசையில் விமானத்தை தரையிறக்க வேண்டும் என்ற விமானியின் கேள்விக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்த நேபாள அதிகாரியின் பதில் அந்த விமானியால் புரிந்து கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் விமானத்தை தென் பகுதியில் தரையிறக்கச் சொல்லியே விமான ஓட்டிக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆனால், விமானம் வடக்குப் பகுதியில் தரையிறக்கப்பட்டது. எதற்காக இவ்வாறு தரையிறக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இந்த விபத்து தொடர்பில் விமான சேவை நிறுவன அதிகாரிகளும், காட்மண்டு கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் மோதிக்கொண்டுள்ளனர்.

கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் உத்தரவை விமானி மதிக்கவில்லை என விமான நிலைய அதிகாரிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்துள்ள 21 பேர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்