காதலியின் அஸ்தியுடன் 1500 கி.மீற்றர் நடந்தே செல்லும் காதலன்! உதவியாக வரும் நாய்கள்: நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தாய்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது அஸ்தியுடன் மலையேறும் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லந்தின் Udon Thanis Muang பகுதியைச் சேர்ந்தவர் Sakchai Suphanmart. 39 வயதான இவர் கடந்த புதன் கிழமை Chiang Mai நகரின் San Patong மாவட்டத்தில் இருக்கும் நெடுஞ்சாலையில் தன் காதலியின் அஸ்தியுடன் இரண்டு நாய்கள் மற்றும் வண்டியுடன் நடந்து சென்றுள்ளார்.

எதற்காக இப்படி ஒரு பயணம் என்று பிரபல ஆங்கில் ஊடகம் ஒன்று அவரிடம் கேட்ட போது, நான் கடந்த 2017-ஆம் ஆண்டு Trang பகுதியிலிருந்து தன் காதலியின் அஸ்தியை Doi Inthanon-ல் இருக்கும் மலையில் தூவுவதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

என்னுடைய காதலில் கடந்த 2016-ஆம் ஆண்டு இறந்துவிட்டார். நான் அவரை காதலிக்கும் போது, போதிய அளவில் பணம் சேர்த்துவிட்டு உலகநாடுகள் மற்றும் Doi Inthanon பகுதிகளுக்கு சென்று வருவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தேன்.

ஆனால் அவள் எதிர்பார்தவிதமாக இறந்துவிட்டாள். எப்படி இறந்தார் என்பதை அவர் கூறவில்லை. இந்த பயணத்தின் போது, வழியில் இருக்கும் சாலையில் படுத்து உறங்குவேன், அதன் பின் மீண்டும் Doi Inthanon-ஐ நோக்கி பயணிப்பேன்.

உயிரோடு இருந்த போது அவளின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்பதால், அவளின் அஸ்தியை Doi Inthanon-ல் இருக்கும் உயரமான மலைப்பகுதியில் அவளுடைய அஸ்தியை தூவ முடிவு செய்துள்ளேன் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும் அவர் நான் இந்த பயணம் மேற்கொண்ட இரண்டு நாய்கள் எனக்கு நண்பர்களாக மாறின, அதுவும் என்னுடன் வருகின்றன. சில நேரங்கள் அந்த நாய்கள் சாலையில் செல்லும் போது, விபத்தில் சிக்கிவிடுமோ என்ற பயம் இருக்கும், இருப்பினும் அந்த ஜீவன்களும் இப்போது என்னுள் ஒன்றாக மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி Trang-லிருந்து Doi Inthanon பகுதிக்கும் இடையேயான தூரம் 1541 கி.மீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்