மஸாஜ் செய்யும் பெண்ணின் கையில் சிக்கிய குழந்தை படும் பாடு: அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

மஸாஜ் செய்யும் ஒரு பெண் ஒரு குழந்தையை குரங்கு கையில் சிக்கிய பூமாலையைப் போல் படாத பாடு படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு சிகிச்சை என்று அந்த குழந்தையின் பெற்றோரிடம் கூறும் அந்த பெண், குழந்தையை ஒரு பொம்மையை சுழற்றுவது போல கைகளைப் பிடித்து சுழற்றுகிறாள்.

முதலில் இரண்டு கைகளைப் பிடித்து சுழற்றும் அவள் பின்னர் ஒவ்வொரு கையாக பிடித்து சுழற்றுகிறாள்.

கடைசியாக குழந்தையின் தலையைப் பிடித்துக் கொண்டு அவள் குழந்தையை ஆட்டுவதைப் பார்க்கும் யாருக்கும் கோபம் வரும்.

குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு இந்த வகை மஸாஜ் உதவும் என்கிறாள் அவள். இந்த வீடியோ Kazakhstan நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

அதே நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான Bogenbai Aytenov, அந்த வீடியோவைப் பார்த்து தான் அதிர்ச்சியில் உறைந்து போனதாகத் தெரிவிக்கிறார்.

குழந்தையின் உடல் மிக மென்மையானது என்று கூறும் அவர் இது மஸாஜே அல்ல, இது குழந்தைக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்