உயிரிழந்த மணமகனுக்கு மீண்டும் உயிர் கொடுத்த வருங்கால மனைவி: நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் திடீரென உயிரிழந்த நிலையில், அவரின் நினைவுகளை உயிருடன் வைத்து கொள்ளும் வகையில் நெகிழ்ச்சியான விடயத்தை வருங்கால மனைவி செய்துள்ளார்.

அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் ரேண்டி ஜிம்மர்மேன். இவருக்கும் டெப்பி கெர்லாச் என்ற பெண்ணுக்கும் கடந்த 11-ஆம் திகதி திருமணம் நடக்கவிருந்தது.

ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சாலை விபத்தில் ரேண்டி உயிரிழந்தார்.

வருங்கால கணவர் இறந்ததால் துடித்து போன டெப்பி நெகிழ்ச்சியான ஒரு விடயத்தை செய்ய முடிவெடுத்தார்.

அதன்படி ரேண்டி மீண்டும் தன்னுடன் சேர்ந்து இருப்பது போன்ற போட்டோ ஷூட்டை கிறிஸ்டி என்ற புகைப்பட கலைஞரை வைத்து நடத்தினார்.

இதையடுத்து புது ஆடை அணிந்த டெப்பி விதவிதமாக போட்டோ எடுத்து கொண்டார்.

பின்னர் அந்த புகைப்படங்களில் ரேண்டியும் அருகில் இருப்பது போல கிறிஸ்டி உருவாக்கினார்.

இதோடு, ரேண்டியின் சடலத்தை எரிக்கும் சாம்பலையும் கையில் ஏந்தியபடி டெப்பி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

இது குறித்து புகைப்பட கலைஞர் கிறிஸ்டி கூறுகையில், டெப்பியின் வாழ்க்கையில் நடந்த சோகம் மிகபெரியது.

அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இந்த விடயத்தை செய்தேன் என கூறியுள்ளார்.

டெப்பி - ரேண்டி இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் 200,000-க்கும் அதிக முறை பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers