தென் ஆப்பிரிக்காவில் சிறுத்தைகள் வனவிலங்கு காப்பகத்தில் இரண்டு சிறுத்தைகளுக்கு மத்தியில் சிக்கிய ஆமை ஒன்று தன்னுடைய ஓட்டை வைத்து சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சிறுத்தைகள் வனவிலங்கு காப்பாகம் உள்ளது. இந்த வனவிலங்கு காப்பாகத்தில், ராட்சத ஆமை ஒன்று அங்கிருக்கும் Skyler மற்றும் Zahra என்ற சிறுத்தைகளிடம் சிக்கியுள்ளது.
இதனால் அந்த சிறுத்தைகள் அதை தாக்குவதற்கு முயற்சிக்கின்றன. ஆனால் அந்த ராட்சத ஆமை எப்படி தப்பித்தது தெரியுமா? அதாவது முதலில் ஒரு சிறுத்தை ஒன்று ஆமை அருகில் வந்து தாக்க முயற்சிக்கிறது.
அதன் பின் பயந்து செல்கிறது. இதைக் கண்ட மற்றொரு சிறுத்தை உடனடியாக அதன் அருகில் வந்து மீண்டும் அந்த ஆமையை தாக்க முயற்சிக்கிறது. ஆனால் ஆமையோ தன்னுடைய ஓட்டை வைத்து சாமார்த்தியமாக தப்பிக்கிறது.
இது போன்ற காட்சி அந்த வனவிலங்கு காப்பகத்தில் முதல் முறையாக நடக்கிறது என்று கூறி அது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.