வறுமையை காரணமாக்கி செக்ஸ் அடிமையாக்கப்பட்டேன்: இளம் பெண்ணின் கண்ணீர் பேட்டி

Report Print Abisha in ஏனைய நாடுகள்

ரோமானியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது வறுமையின் காரணமாக மாடலிங் செய்ய விருப்பபட்டு இங்கிலாந்து சென்று அங்கு 10 ஆண்டுகள் செக்ஸ் அடிமையாக வாழ்ந்தது குறித்து கண்ணீ்ர மல்க பேசியுள்ளார்.

ஹெலீனா என்ற பெண் ரோமானிய நாட்டில் ஒரு வறுமையான சூழலில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரின் குடும்பத்தினரின் உதவியுடன் மாடலிங் செய்யலாம் என்று அனுமதி பெற்று ஒரு நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

இந்நிலையில் அந்த நிறுவனம் மாடலிங் பணிக்கு இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று அங்கு அனுப்பி வைத்துள்ளது.

இது தனது வாழ்க்கையில் நல்ல துவக்கம் என்று இங்கிலாந்து பறந்த ஹெலினாவிற்கு, வாரத்திற்கு 500 யூரோகள் சம்பளமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளது அந்நிறுவனம்.

இந்நிலையில் இங்கிலாந்து வந்த அவரை ஒரு பெண் தொடர்பு கொண்டு நாளை போட்டோ சூட் உள்ளது தயாராக வா என்று அழைத்துள்ளார். அங்கு சென்ற அவருக்கு அதிர்ச்சிகள் காத்திருந்தன, உள்ளாடைகள் மட்டு அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

இதை விரும்பாத ஹெலீன தன்னை அழைத்த பெண்ணிடம் இதில் தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அந்த பெண் இதை விட சிறந்த ஒன்று உனக்கு கிடைக்கும் கொஞ்சம் பொறுத்து கொள்ளும் படி அறிவுறுத்தி உள்ளார்.

இதனை அடுத்து அந்த புகைப்படம் பாலியல் உறவு விரும்பிகளுக்கான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்த அவர் என்னிடம் இப்படி எல்லாம் தெரிவிக்கப்பட வில்லை என்று கூறியுள்ளார். அதற்கு அவர்கள் உன் குடும்பத்தினரை கொன்று விடுவோம் நீ ஒத்து கொள்ளதான் வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனால் வேறு வழி இன்றி அந்த பணியை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதலில் அவருடன் உறவு கொண்ட நபர் கடுமையாக உடலை வருத்தும்படி நடந்து கொண்டதை கண்டு பயந்து போன ஹெலீனாவை, தொடர்ந்து 10 வருடங்களாக அதை போதை பொருட்கள் மூலம் செய்ய வைத்துள்ளனர்

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆங்கில வாடிக்கையாளர் ஒருவரிடம் தனது நிலையை எடுத்து கூறி, அவர் மூலம் ரோமானியாவிற்கு தப்பி வந்ததாக ஹெலீனா செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

மேலும் தன்னைபோல் ஆயிரக்கணக்கான பெண்கள் இங்கிலாந்து நாட்டில் செக்ஸ் அடிமைகளாக உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்