குழந்தைகளுடன் தனியாக தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை... மர்ம கும்பல் வெறியாட்டம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை முகமுடி அணிந்து வந்த மர்மநபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும், Fateh pur பகுதியிலே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ தினத்தன்று 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென்று அவரது வீட்டின் உள்ளே உடைந்து நுழைந்த முக முடி அணிந்திருந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கி முனையில் பாலியல்பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அவரின் முடியை வெட்டியும், பின்புறம் மற்றும் வலது கை மற்றும் வலது காலில் ஆசிட்டை ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அங்கிருந்து கிடைத்த கைரேகைகளின் அடிப்படையில் மர்மநபர்களை பொலிசார் தேடி வருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கராச்சியில் வசித்து வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...