என் மகன் இறந்து கொண்டிருக்கிறான்.. புலம்பெயர்ந்தோர் வேலியில் கண்ணீருடன் உதவி கேட்கும் தாய்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மெக்சிகன் தடுப்பு முகாமில் புலம்பெயர்ந்த தாய் ஒருவர், உதவி கேட்டு அழும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிகோவின் தபாச்சுலா நகரில் உள்ள புலம்பெயர்ந்தோர் தடுப்பு முகாமில், ஆசியா, கியூபா, ஹைட்டி மற்றும் ஏராளமான ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த இடத்தில் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் சரியாக வழங்கப்படவில்லை எனக்கூறி நேற்று நூற்றுக்கணக்கானோர் முகாமில் இருந்து தப்ப முயற்சி செய்தனர்.

வீடியோவை காண....

உடனே அங்கு குவிந்த பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்த முயன்றதால், இருதரப்பினருக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது.

அந்த சமயத்தில் பெயர் வெளியிடப்படாத பெண் ஒருவர் புலம்பெயர்ந்த வேலியின் கீழ் கண்ணீர் மல்க உதவி கேட்டுள்ளார்.

அந்த வீடியோவில்,

“எனது மகன் நிறைய நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறான். நான் நிறைய கஷ்டப்படுகிறேன். அவர்கள் எங்களுக்கு கொஞ்சம் மட்டுமே உணவு கொடுக்கின்றனர். குடிப்பதற்கு ஏற்ற தண்ணீர் இங்கு வழங்கப்படவில்லை.

என் மகனுடன் சேர்த்து எனக்கு உதவுங்கள். அவன் நோய்வாய்ப்பட்டுள்ளான். எனக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஒருவனுக்கு ஐந்து வயது, மற்றொருவன் 14-மாத குழந்தையாக உள்ளான்.

தயவுகூர்ந்து உதவுங்கள்... அவன் இறந்து கொண்டிருக்கிறான்" என கண்ணீருடன் கெஞ்சுவதை போல உள்ளது.

காண்போர் நெஞ்சை உருகவைக்கும் இந்த வீடியோ காட்சியானது அந்நாட்டு ஊடகத்தில் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்