வெளிநாட்டில் இருந்த படி வாட்ஸ் அப் மூலம் மனைவிக்கு கணவன் கொடுத்த அதிர்ச்சி... வெளியான முழுப் பிண்ணனி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர் இந்தியாவில் வசிக்கும் தன் மனைவிக்கு வாட்ஸ் ஆப் மூலம் விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் முஸாபர்பூரில், பிஹாரி கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்ணின் கணவர், குவைத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தன் மனைவியிடம் 5 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தியுள்ளார்.

இதனால் அப்பெண் கடந்த மே மாதம், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை குறித்து, காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையறிந்த கணவன், மனைவியிடம் புகாரை வாபஸ் பெறும்படி கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அப்பெண் கடந்த ஞாயிற்றுக் கிழமை உள்ளூர் காவல்நிலையத்திற்கு வந்து, தனது கணவர் தன்னை குவைத்தில் இருந்தபடி வாட்ஸ் அப் மூலம் மூன்று முறை தலாக் கூறி விவகாரத்து செய்துவிட்டதாக கூறி புகார் அளித்துள்ளார்.

இது சட்டவிரோதம் என அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது உத்தரப்பிரதேச பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்