2019ஆம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

சுவீடன் நாட்டில் இந்த ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இலக்கியம், மருத்துவம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தெரிவு செய்து, நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன.

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், 2019ஆம் ஆண்டிற்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு வில்லியம் ஜி.கேலின், சர் பீட்டர் ரேட் கிளிப், கிரேக் எல்.செம்ன்ஸா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடல் செல்கள் குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படாததால், இந்த ஆண்டு இரண்டு நோபல் பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன. இது வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.

நாளை இயற்பியல் துறைக்கும், நாளை மறுதினம் வேதியியல் துறைக்கும் பரிசுகள் அறிவிக்கப்படும். கடந்த 1901ஆம் ஆண்டு முதன் முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் 1969ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

AP

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்