சுட்டு வீழ்த்தப்பட்டது சவுதி-அமெரிக்கா படைகளுக்கு சொந்தமான உளவு விமானம்: தொடரும் ஏமனின் அதிரடி

Report Print Basu in ஏனைய நாடுகள்

சவுதி-அமெரிக்க படைகளுக்கு சொந்தமான உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஏமான் இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜ்ரானுக்கு அருகிலுள்ள க்ஸாரா பகுதியின் வான்வெளியில் சவுதி-அமெரிக்க படைகளின் உளவு விமானம், ஏமன் இராணுவத்தின் வான் பாதுகாப்பு மற்றும் பிரபலமான குழுக்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இராணுவ வட்டாரம் கூறியது.

சனிக்கிழமையன்று, சவுதி-அமெரிக்க படையைச் சேர்ந்த ஒரு உளவு விமானத்தை ஜிசானில் ஜபல் அல்-ஆலமுக்கு கிழக்கே ஏமனின் வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக டிசம்பர் 5ம் திகதி, ஜிசானின் ஜஹ்பானுக்கு கிழக்கே விரோதப் பணிகளை மேற்கொண்டிருந்த சவுதி-அமெரிக்க உளவு விமானத்தை வான் பாதுகாப்பு சுட்டுக் கொன்றது கவனிக்கத்தக்கது.

மேலும், டிசம்பர் 4 ஆம் திகதி, இரண்டு உளவு விமானங்கள் ஜிசானிலும், ஆசீருக்கு வெளியே உள்ள பாகிம் மாவட்டத்திலும் சுட்டுக் வீழ்த்தப்பட்டதாக ஏமன் இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது வரை இத்தாக்குதல்கள் தொடர்பாக சவுதி-அமெரிக்க படைகள் எந்த விளக்கும் அளிக்கவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்