உக்ரைன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தகவல்: புறப்பட்ட இடத்துக்கே அவசரமாக திரும்பிய ஐரோப்பிய விமானங்கள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
121Shares

உக்ரைன் விமானத்தை ஈரான்தான் சுட்டு வீழ்த்தியது என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, ஈரான் நோக்கி புறப்பட்ட ஐரோப்பிய விமானங்கள் பல, அவசர அவசரமாக நடுவானில் திருப்பப்பட்டு புறப்பட்ட இடத்துக்கே திரும்பின.

176 பேருடன் பயணித்த உக்ரைன் விமானத்தை ஈரான்தான் சுட்டு வீழ்த்தியது என அமெரிக்கா, கனடா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் கூறியுள்ளன. அத்துடன், விமானம் ஒன்றை ஏவுகணை தாக்குவதுபோல் தோன்றும் புதிய வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

எனவே, ஈரான் நோக்கி புறப்பட்ட பல ஐரோப்பிய விமானங்கள், அச்சம் காரணமாக நடு வானிலேயே அவசரமாக திருப்பப்பட்டு புறப்பட்ட இடத்துக்கே திரும்பியுள்ளன.

ஃப்ராங்பர்ட்டிலிருந்து டெஹ்ரானுக்கு செல்லும் லுஃப்தான்சாவின் தினசரி நேரடி விமானம், ரொமேனியா பகுதியிலேயே நடு வானிலேயே திரும்பி ஜேர்மனியை சென்றடைந்தது.

அதேபோல், வியன்னாவிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, அவசர அவசரமாக சோபியாவில் இறங்கி, பின்னர் ஆஸ்திரியாவுக்கு திரும்பியுள்ளது.

அத்துடன் இன்று டெஹ்ரானுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இத்தனை பேர் குற்றம் சாட்டியும் தங்கள் நாட்டு ஏவுகணைதான் விமானத்தை தாக்கியது என்பதை ஒப்புக்கொள்ள மறுத்துள்ள ஈரான், ஏற்கனவே ஈரான் அதிகாரிகள் சம்பவ இடத்தில் கை வைத்துவிட்ட நிலையில், தற்போது கனேடிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளை விசாரணை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்