ஈரானில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை வீடியோ எடுத்த நபர் கைது!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

உக்ரேனிய பயணிகள் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்படுவதைக் காட்சிகளாக படமாக்கிய நபரை கைது செய்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமையன்று தெஹ்ரானில் இருந்து 176 பேருடன் புறப்பட்ட பிஎஸ் 752 விமானம், அடுத்த சில நிமிடங்களில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டதாக பரவிய கூற்றை ஈரான் ஆரம்பத்தில் மறுத்தது. ஆனால் பின்னர் பயணிகள் ஜெட், அதன் வான் பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டது.

தற்செயலாக சுட்டுக் வீழ்த்தப்பட்டதாக ஈரான் கூறியதுடன், இந்த சம்பவம் தொடர்பாக பலரையும் கைது செய்திருப்பதாகவும் அறிவித்தது.

ஜனாதிபதி ஹசன் ரூஹானி தனது நாட்டின் விசாரணையை "சிறப்பு நீதிமன்றம்" மேற்பார்வையிடும் என்றார்.

"இது முறைப்பட்ட மற்றும் வழக்கமான வழக்கு அல்ல. உலகம் முழுவதும் இந்த நீதிமன்றத்தை கவனிக்கும்" என்று அவர் ஒரு உரையில் கூறினார்.

"துயரமான சம்பவம்" ஒரு தனிநபர் மீது குற்றம் சாட்டப்படக்கூடாது என்றும் திரு ரூஹானி வலியுறுத்தினார்.

"தாக்குதலின் போது ஏவுகணையை செலுத்திய நபர் மட்டுமல்ல, பொறுப்பான மற்றவர்களும் கூட," என்று அவர் கூறினார்.

சம்பவத்தின் போது செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டபோது, ​​விமானம் ஏவுகணையால் தாக்கப்படுவதை காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறினர்.

இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்ட நபரை கைது செய்திருப்பதாக ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் ஆரம்பத்தில் காட்சிகளை வெளியிட்ட லண்டனை தளமாகக் கொண்ட ஈரானிய பத்திரிகையாளர் ஒருவர் தனது ஆதாரம் பாதுகாப்பானது என்றும், ஈரானிய அதிகாரிகள் தவறான நபரை கைது செய்துள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்