13 வயது மாணவியை கர்ப்பிணியாக்கிய 10 வயது சிறுவன்: பயமின்றி தொலைக்காட்சியில் நேரடியாக தோன்றிய ஜோடி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் 10 வயது சிறுவன் 13 வயது சிறுமி ஒருத்தியை கர்ப்பமாக்கியதாக ஒரு செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஜோடியும், அவர்களது பெற்றோரும் சர்வசாதாரணமாக தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை! Zheleznogorsk என்ற இடத்தைச் சேர்ந்த Ivan (10), தான்தான் தனது காதலியான Darya (13)வின் குழந்தையின் தந்தை என்று கூறியிருக்கிறான்.

ஆனால், பாலின சிறப்பு மருத்துவர் ஒருவர், Ivan அந்த குழந்தையின் தந்தையாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

பெற்றோரின் சம்மதத்தின் பேரில் இளம் ஜோடி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் பேசிய மருத்துவர், Ivan இன்னமும் சிறுவனாகத்தான் இருக்கிறான், இனப்பெருக்கம் செய்யும் அளவு அவனது உடல் முதிர்ச்சி பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

எனவே, வேறொருவர் அந்த குழந்தையின் தந்தையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Daryaவோ, தனக்கு வேறு யாருடனும் தொடர்பில்லை என்று கூறியிருக்கிறாள். அதே நேரத்தில், Daryaவை பரிசோதித்த மன நல நிபுணர் ஒருவரும், அவள் பொய் சொல்ல வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஜோடியின் பெற்றோர், கர்ப்பமாக இருகும் சிறுமிக்கு தாங்கள் ஆதரவாக இருக்கப்போவதாகவும், குழந்தையை தாங்களே வளர்க்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்