இணையத்தை உருகவைத்த சிறுவனின் வீடியோ: உலகம் முழுவதிலும் இருந்து குவியும் ஆதரவு

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தினமும் அனுபவித்து வரும் துன்பம் குறித்து அவுஸ்திரேலிய சிறுவன் பேசிய வீடியோவானது இணையம் முழுவதும் வைரலானதை அடுத்து, உலகம் முழுவதிலுமிருந்து ஆதரவு குவிந்து வருகிறது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்த குவாடன் பேல்ஸ்(Quaden Bayles) என்கிற 9 வயது சிறுவன், அச்சோண்ட்ரோபிளாசியா எனப்படும் மிகவும் பொதுவான ஒரு வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

தினமும் பள்ளியில் சக மாணவர்கள் துன்பறுத்துவதால், வேதனையில் இருந்த சிறுவன் புதன்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது தனது தாயிடம் அழுது புலம்பியுள்ளான்.

இதனை வீடியோவாக எடுத்து அவனுடைய தாய் யர்ராகா பேல்ஸ் இணையத்தில் பதிவிட்டார். நெஞ்சை உருக்கும் அந்த வீடியோ காட்சியானது இணையம் முழுவதும் வைரலானதை அடுத்து, உலகின் பல பகுதிகளில் இருந்து ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது.

இந்த வீடியோவானது 14 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கும் நிலையில், #WeStandWithQuaden என்னும் ஹேஸ்டேக்கில் இணையதளவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் நடிகர் ஹக் ஜாக்மேன், ஜெஃப்ரி டீன் மோர்கன், மற்றும் கூடைப்பந்து வீரர் எனெஸ் கான்டர் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நகைச்சுவை நடிகர் பிராட் வில்லியம்ஸ், சிறுவனை டிஸ்னிலேண்டிற்கு அனுப்ப 1,67,000 டொலர் (ரூ. 1.2 கோடி) பணம் திரட்டியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்