கொரோனாவால் ஐரோப்பாவை தளமாக கொண்ட 2,600 இராணுவ வீரர்களை தனிமைப்படுத்திய அதிகாரிகள்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஐரோப்பாவை தளமாக கொண்ட 35 இராணுவ வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 2600 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவை தளமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள் மற்றும் இராணுவ ஊழியர்கள் சுயமாக தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளனர்.

அவர்களில் குறைந்தது 35 பேர் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட துருப்புக்கள் நோய்வாய்ப்படவில்லை என்று பாதுகாப்புத் துறை கூறியிருந்தது. ஆனால் சமீபத்திய காரணங்களால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக விளக்கம் கொடுத்துள்ளது.

மேலும், மற்ற 72,000 இராணுவ வீரர்கள் நோய்தாக்குதலுக்கு உள்ளாகாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் EUCOM தளபதியும், அமெரிக்க விமானப்படை தளபதியுமான டோட் வால்டர்ஸ் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்