51 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நியூசிலாந்து மசூதி தாக்குதல் வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி !

Report Print Basu in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில் கடந்த ஆண்டு இரண்டு மசூதிகளில் தாக்குதல் நடத்தி 51 பேரை கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

கிரைஸ்ட்சர்ச் நகரில் கடந்த ஆண்டு இரண்டு மசூதிகளில் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 51 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இத்தாக்குதல் தொடர்பில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயதான பிரெண்டன் டர்ரன்ட் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

தன் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்த பிரெண்டன் டர்ரன்ட், தற்போது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, மேலும் 40 பேரை சுட்டுக்கொல்ல முற்பட்டதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பதால் நியூசிலாந்து முழுவதும் முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் நடந்த இந்த வழக்கு விசாரணையில் பொது மக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பலரும் காணொளி காட்சி வழியாக விசாரணையில் பங்கேற்றனர். அவுஸ்திரேலியாவில் இருந்த படி பிரெண்டன் டர்ரன்ட் மற்றும் அவரது வழக்கறிஞர் காணொளி காட்சி வழியாக விசாரணையில் பங்கேற்றனர்.

குற்றவாளி குற்றதை ஒப்புக்கொண்ட நிலையில், கொரோனாவால் முடக்கப்பட்டுள்ள நீதிமன்றம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய பின் தண்டனை வழங்கும் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மே 1ம் திகதி வரை பிரெண்டன் டர்ரன்டை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ள நீதிபதி, அதற்குள் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...