கொரோனாவில் இருந்து சீனா மீண்டது எப்படி?... பாரம்பரிய மருந்து உள்ளது! தமிழில் விளக்கமளித்த சீனப்பெண்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கொரோனா பாதிப்பில் இருந்து தான் தப்பியது குறித்தும், வைரஸ் தொற்று ஏற்படாமல் மக்கள் எப்படி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் சீன ஊடக குழுமத்தை சேர்ந்த இலக்கியா என்ற சீனப்பெண் தமிழிலேயே பேசியுள்ளார்.

உலகம் முழுக்க கொரோனா பரவியிருக்கும் நிலையில் அதை சமாளிக்க சீனா கையாண்ட முறை குறித்து இலக்கியா பேசினார்.

முக்கியமாக சீனா கடைப்பிடித்த வழிமுறைகளையும், நடைமுறைகளையும் ஆலோசனையாக வழங்கியுள்ளார்.

நண்பர்களுக்கு நான் சொல்ல வருவது என்ன என்றால், குறிப்பிட்ட காலத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது.

மன அழுத்தம் ஏற்ப்பட்டால் கவலை படாதீர்கள். இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்பதே சீனா காண்பித்து உள்ளது.

சீனாவில் கொரோனா தாக்கம் இருந்த பகுதிகள் உடனடியாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது

தொற்று உள்ள நோயாளிகள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக சீனா பாரம்பரிய மருந்து உள்ளது, இது பாதாம், புதினா கலந்த மூலிகை சித்த மருத்துவம் ஆகும், ஆனால் இது மருத்துவர்கள் ஆலோசனைபடி தான் எடுத்து கொள்ள வேண்டும், இது கொரோனா விடயத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது.

வெளியே சென்று வீடு திரும்பும் போது முகம் மற்றும் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

வெளியே செல்லும் போது முக கவசம் அணிந்து செல்லுங்கள், உங்கள் நண்பர்களிடம் பேசும் போது கொஞ்சம் இடைவெளி விட்டு பேசுங்கள். இதையெல்லாம் பின்பற்றியே நான் பாதிப்பில் இருந்து தப்பினேன்.

அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் நீங்கள் உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள், என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்