ஐநாவின் 75வது ஆண்டில் 50 நாடுகள் அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து!

Report Print Karthi in ஏனைய நாடுகள்

சர்வதேச அளவில் அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளை உருவாக்க ஐநா முயன்று வரும் நிலையில் தற்போது, அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளின் பட்டியலில் 50 வது நாடாக ஹோண்டுராஸ் இணைந்துள்ளது மிகவும் பாராட்டத்தக்க விடயம் என ஐநா குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த 50 நாடுகளையும் பாராட்டியதோடு மற்ற நாடுகளும் இந்த பட்டியலில் இணைய வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்துள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று தெரிவித்திருந்தார்.

அணு ஆயுத பாதிப்பிலிருந்து உலக மக்களை காக்கவும், அணு ஆயுத பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இந்த 50 நாடுகளுக்கு குட்டெரெஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

டுஜாரிக் கருத்துப்படி, இந்த ஒப்பந்தம் “அணு ஆயுதங்களை முற்றிலுமாக அகற்றுவதற்கான ஒரு அர்த்தமுள்ள உறுதிப்பாட்டைக் குறிக்கிறது, இது ஐக்கிய நாடுகள் சபையின் முன்னுரிமையாக உள்ளது” என்றும் கூறினார்.

ஐநா உருவாகி 75 ஆண்டு ஆன நிலையில் தற்போது 50 நாடுகள் அணு ஆயுததத்திற்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது பெருமைக்குரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

"அணு ஆயுதங்களை ஒழிக்கும் நோக்கத்துடன் அமைதியை வளர்ப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது" என்று ஃபிஹ்ன் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்