சீனாவின் செயலால் சொந்த நாட்டை விட்டு பிரித்தானியாவுக்கும் ஓடி வரும் மக்கள்! பரிதாப பின்னணி

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares

ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் தற்போது சீனாவுக்கு எதிராக போராடிவருகின்றனர். இவர்களது போராட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 1997-ஆம் ஆண்டு வரை பிரித்தானியாவின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் பின்னர் தனிநாடாக செயல்பட பிரித்தானிய அரசு அனுமதியளித்தது.

அன்று முதல், சீனாவால் பகுதியாகக் கட்டுப்படுத்தப்படும் ஹாங்காகை தற்போது தனது தேசிய பாதுகாப்புச் சட்டம் மூலமாக சீன கம்யூனிச அரசு முழுவதுமாக கையகப்படுத்த முயன்று வருவதாக கூறப்படுகிறது.

இதனால் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஹாங்காங் மக்கள் எளிதில் பிரித்தானியாவுக்கு குடியேற விசா கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

இது சீனாவை கொதிப்படையச் செய்ததால், பொது இடங்களில் ஒன்றுகூடி போராடிவரும் ஜனநாயக ஆதரவாளர்களை பயங்கரவாதி என்ற குற்றம் சாட்டி அவர்களை சீன பொலிசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

சீனாவின் இந்த அத்துமீறலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இது குறித்து சீன போக்குவரத்துக் காவலர் ஒருவர் கூறுகையில் கடந்த ஜூன் 2019-ஆம் ஆண்டு துவங்கி 2020-ஆம் ஆண்டுவரை 1,400 வன்முறை சம்பவங்கள் பொது இடங்களில் அரங்கேறியுள்ளதாக குறிப்பிட்டார்.

போராட்ட காலங்களில் சிலர் அமைதி வழியிலும் வேறு சிலர் வன்முறையிலும் ஈடுபட்டு சீன கம்யூனிச அரசை ஹாங்காங்கிலிருந்து விரட்ட முயற்சி மேற்கொள்கின்றனர்.

ஹாங்காங்கின் எல்லையில் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவில் குடியேற சில ஹாங்காங் குடிமக்கள் முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியாகியது.

சீனாவின் அராஜகப் பிடியில் வாழ்வதைக் காட்டிலும் பிரித்தானியாவில் குடியேறுவதை ஹாங்காங்வாசிகள் பலர் விரும்பியதால் தற்போது விசா விண்ணப்பங்கள் அதிகரித்து வருகின்றன.

லண்டனில் உள்ள ஆடம்பரமான பகுதிகளில் பத்தில் ஓர் ஹாங்காங் குடிமகனால் மட்டுமே குடியேற முடியும்.

பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடான பிரித்தானியாவில் வேலை வாய்ப்பினைப் பெற்று அங்கு நிரந்தரமாக வசிக்க பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் முன்னேறிய ஹாங்காங் வாசிகளால் மட்டுமே முடியும்.

இந்நிலையில் ஹாங்காங்கில் வாழும் ஏழை எளிய மக்கள் பிரித்தானியாவில் குடியேறுவது என்பது தற்போது இயலாத காரியமாகவே உள்ளது. இதை போரிஸ் ஜோன்சன் அரசு கருத்தில் கொள்ளவேண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்