தினேஷ் கார்த்திக்கை கொண்டாடிய நாம், மற்றொரு சாதனை தமிழனை மறந்தது ஏன்?

Report Print Harishan in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் சிறப்பான பவுலிங்கை வீசியது வாஷிங்டன் சுந்தர் மட்டுமே.

ஆனால் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் வாஷிங்டன் சுந்தரின் சாதனைகளை நாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இந்த முத்தரப்பு தொடரின் நாயகன் விருதை பெற்றுள்ள இவருக்கு வயது 18 வருடம் 164 நாட்கள் மட்டுமே.

இவ்வளவு இளம் வயதில் தொடர் நாயகன் விருதை வென்ற முதல் வீரர் இவர்தான். 18 வயதில் சிலர் வாங்கியிருந்தாலும் நாட்கள் அடிப்படையில் இவரே இளமையானவர்.

இந்திய அணியின் ஃபிங்கர் ஸ்பின்னராக கலக்கி வந்த அஸ்வின் தன் ஸ்டைலை மாற்றியுள்ள நிலையில் வாஷிங்டன் சுந்தருக்கான தேவை தற்போது அதிகமாகியுள்ளது.

தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் சுந்தர்.

கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் 1/20, 3/22, 2/21, 0/23, 2/28 என்று பந்து வீசியுள்ள இவரின் எக்கனாமி சராசரியாக 5.90-ஆக உள்ளது. இந்த தொடரின் சிறந்த எக்கனாமியும் இதுதான்.

இந்த கிரிக்கெட் அணியின் உலகக் கோப்பை வீரர்களின் பட்டியலில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி, டி-20 ஐசிசி பவுலிங் ரேங்கிங்கில் 151-இல் இருந்து 31-வது இடத்திற்கு முன்னேறியுள்ள இவருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் 10 இடத்திற்குள் வர வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்