வெளிநாட்டில் இந்திய அணி வீரர்களுக்கு இப்படியொரு வரவேற்பா? வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக ஓவல் மைதானத்திற்கு சென்ற இந்திய கிரிக்கெட் அணியினருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு வழங்கப்பட்டது

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த 23ம் திகதி நடைபெற்ற நிலையில் இந்தியா வெற்றி பெற்றது.

இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் தற்போது ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நேற்று ஓவல் மைதானத்திற்கு சென்றது.

ஓவல் மைதானத்திற்கு வந்த இந்திய அணியை பழங்குடி இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறையில் நடனமாடி வரவேற்றனா்.

இந்த வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டா் பக்கத்தில் வெளியிட அது வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers