தொடர்ந்து வாய்ப்பளிக்கும் டோனி.... வருத்தப்படும் யுவராஜ் ரசிகர்கள்!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும் சென்னை அணியில் வாட்சனுக்கு டோனி மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கும் போது மும்பை இந்தியன்ஸ் அணியில் யுவராஜிற்கு வாய்ப்பளிக்கப்படாமல் இருப்பது அவர்களுடைய ரசிகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை அணியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விளையாடி வரும் வாட்சன் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் கூட, அணியின் கேப்டன் டோனி தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வாட்சன் 96 ரன்களும், டெல்லி அணிக்கெதிரான போட்டியில் 50 ரன்களும் எடுத்து மட்டுமே இந்த ஆண்டு அவர் எடுத்த அதிகபட்ச ரன்களாகும்.

இதுபோல சிறப்பாக விளையாடாத முன்னணி வீரர்கள் பலருக்கும் டோனி தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார்.

ஆனால் அதே சமயம் மும்பை அணியில் விளையாடி வரும் யுவராஜ் சிங், 4 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார். அதில் ஒரு போட்டியில் மட்டும் 53 ரன்களை எடுத்திருந்தார்.

அணியின் கேப்டன் ரோகித்சர்மா அவருக்கு அதிக வாய்பளிக்காமல் இருப்பதால் ரசிகர்கள் பெரும் வேதனையடைந்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்