உங்களுடன் ஒரு ரகசியத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்! வைரலாகும் டோனியின் வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, தான் வரைந்த ஓவியத்தை காட்டி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள டோனிக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதால் தமிழகத்திலும் கூடுதல் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், டோனி தன்னுடைய புதிய பொழுதுபோக்கு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு கிரிக்கெட் பிடித்திருந்தாலும், ஓவியம் வரைவதிலும் விருப்பம் உண்டு என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘நான் சில ஓவியங்களையும் வரைந்துள்ளேன். என்னுடைய முதல் ஓவியக் கண்காட்சியை விரைவில் நடத்த உள்ளேன். அதற்கு இன்னும் சில காலம் ஆகும். ஓவியம் தெரிந்தவர்கள் எனது ஓவியத்தை பார்த்து அறிவுரைகளை கூறுங்கள். நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் வரைந்த சில ஓவியங்களையும் காண்பித்து, அவை குறித்த நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. கிரிக்கெட்டைப் போல் ஓவியத்திலும் டோனி வெளுத்து வாங்குவார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்