படுகொலையை நிறுத்து, காஷ்மீருக்கு விடுதலை கொடு: இந்தியா- இலங்கை போட்டியில் பறந்த பதாகை

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான உலகக்கிண்ணம் லீக் சுற்று ஆட்டத்தின் இடையே ‘காஷ்மீருக்கு நீதி’ என்ற வாசகத்துடன் பதாகை பறக்கவிடப்பட்டது தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஐசிசி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லீட்ஸில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான உலகக்கிண்ணம் லீக் சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், குட்டி விமானம் ஒன்றில் ‘காஷ்மீருக்கு நீதி (ஜஸ்டிஸ் ஃபார் காஷ்மீர்)’ என்றும்

இதனையடுத்த இன்னொரு விமானத்தில் ‘இந்தியா படுகொலையை நிறுத்து, காஷ்மீருக்கு விடுதலை கொடு’ என்ற வாசகங்களுடன் பதாகை பறக்கவிடப்பட்டது.

இதனைக் கண்டித்து ஐசிசி வெளியிட்ட தனது செய்திக்குறிப்பில், “இந்த விவகாரத்தால் நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். ஐசிசி ஆடவர் உலகக்கிண்ணம் தொடரில் நாங்கள் எந்த வித அரசியல் கோஷங்களையும் அனுமதிப்பதில்லை.

இந்த தொடர் முழுதும் உள்நாட்டு பொலிசார் உதவியுடன் இத்தகைய அரசியல் எதிர்ப்புகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

இதற்கு முந்தைய சம்பவத்தில் வெஸ்ட் யார்க்‌ஷயர் பொலிசார் இனி இப்படி நடக்காது என்று உத்தரவாதம் அளித்திருந்தனர். ஆனால் மீண்டும் இவ்வாறு நடந்திருப்பது எங்களுக்கு கடும் அதிருப்தியை அளிக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 29 ஆம் திகதி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போட்டியின் போது ‘பலுசிஸ்தானுக்கு நீதி வேண்டும்’ என்று ஒரு பதாகை விமானம் மூலம் பறக்க விடப்பட்டது. இது நடந்ததும் இதே மைதானத்தில்தான்

அப்போதும் இது போன்ற அரசியல் எதிர்ப்புக் கோஷங்களுக்கு உலகக்கிண்ணம் தொடரில் இடமில்லை என்று ஐசிசி கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பலுசிஸ்தானுக்கு நீதி என்ற பேனருக்கு பதில் கொடுக்கும் விதமாக இந்த பதாகை அமைந்தது மிகவும் சர்ச்சைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்