ஸ்டீவ் ஸ்மித்தை போல் நடனமாடிய படி துடுப்பாடி அசத்திய ஜோஃப்ரா ஆர்ச்சர்: வைரல் வீடியோ

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் அஷஸ் தொடரிலிருந்து விலகிய அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பாணியில் நியூசிலாந்து வீரர் ஆர்ச்சர் துடுப்பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஐந்த போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 1-0 என்ற வெற்றி கணக்கில் அவுஸ்திரேலிய முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முன்னதாக, நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் வீசிய பந்து தலையில் தாக்க ஸ்மித் மைதானத்திலே சுருண்டு விழுந்தார். எனினும், சிறிது ஓய்வுக்கு பிறகு தொடர்ந்து அப்போட்டியில் விளையாடிய ஸ்மித், 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ஸ்மித், நடனமாடும் பாணியில் பந்துகளை அடிக்காமல் விட்ட விதம் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக லீட்ஸ் மைதானத்தில் துடுப்பாட்ட வலை பயிற்சியில் ஈடுபட்ட நியூசிலாந்து வீரர் ஆர்ச்சர், ஸ்மித் பாணியில் பந்துகளை அடிக்காமல் விட்டு பயிற்சி மேற்கொண்டார். தற்போது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்