Amazon Fire TV சாதனத்தில் தற்போது ஆப்பிள் மியூசிக்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஆப்பிள் மியூசிக் சேவையினை தற்போது Amazon Fire TV சாதனத்திலும் பயன்படுத்தி மகிழ முடியும் என உலகின் பிரம்மாண்டமான ஒன்லைன் வர்த்தக சேவை நிறுவனமான அமேஷான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் நேற்யை தினம் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இச் சேவை முதலில் அமெரிக்காவில் மாத்திரமே கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வாடிக்கையாளர்கள் அமேசானின் அலெக்ஸா சாதனத்தினை பயன்படுத்தி ஆப்பிள் மியூசிக் பாடல்களை இயக்குமாறு கேட்டுக்கொள்ளவும் முடியும்.

இதற்கான கட்டளையை Songs, Artists, Playlists மற்றும் Albums போன்றவற்றின் அடிப்படையில் பிறப்பிக்க முடியும்.

அதேபோன்று Fire TV மற்றும் Echo போன்ற சாதனங்களில் ஆப்பிள் மியூசிக் சேவையினை பிரித்தானியாவில் உள்ளவர்கள் எதிர்வரும் வாரங்களில் பயன்படுத்த முடியும் எனவும் அமேஷான் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers