கடவுச்சொல் இன்றியே தனது சில சேவைகளில் உள்நுழையும் வசதியை தரும் கூகுள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
35Shares

பயனர்களின் கணக்குகளை பாதுகாப்பதற்கு கூகுளின் சில சேவைகளை பயன்படுத்தும்போது கடவுச்சொல் வழங்கப்படுவது அவசியமாகும்.

எனினும் கடவுச் சொற்களை தட்டச்சு செய்வதற்கு குறிப்பிட்ட நேரம் எடுக்கும்.

இந்த நேர தாமதத்தை தவிர்க்கும் நோக்கில் புதிய முயற்சி ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது கூகுள்.

இதன்படி தனது சில சேவைகளை கடவுச்சொல் இன்றியே பயனர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றியமைக்கவுள்ளது.

ஆனால் இச் சேவைகளில் கடவுச் சொல்லிற்கு பதிலாக கைவிரல் அடையாளத்தை (Finger Print) உறுதிப்படுத்த வேண்டும்.

இவ் வசதி கூகுள் குரோம் உலாவிகளிலும், அன்ரோயிட் சாதனங்களிலும் தரப்படவுள்ளது.

இதேவேளை இவ் வசதியானது ஏற்கனவே Google Pay சேவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்