Google Hangouts அப்பிளிக்கேஷனில் உங்கள் சாதனத்தின் திரையை பகிர்வது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஒன்லைன் மூலமாக வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புக்களை ஏற்படுத்தி மகிழ்வதற்கு கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட சேவை Hangouts ஆகும்.

இதில் அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கு நாம் பயன்படுத்தும் சாதனத்தின் திரையினை மற்றையவர்களுக்கு பகிர்ந்துகொள்ளும் வசதியும் காணப்படுகின்றது.

இதனை செயற்படுத்துவதற்கு கீழே தரப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றவும்.

முதலில் கூகுள் குரோம் உலாவில் ஜிமெயில் தளத்தினை திறந்துகொள்ளவும்.

பின்னர் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லினை பயன்படுத்தி உள்நுழையவும்.

இப்போது திரையினை பகிர்ந்துகொள்ள விரும்பும் நபருக்கு வீடியோ அழைப்பினை ஏற்படுத்தவும்.

வீடியோ அழைப்பு மேற்கொண்டிருக்கும் நேரத்தில் மேற்புற வலதுபக்கத்தில் காணப்படும் மூன்று புள்ளிகளை அழுத்துக.

தோன்றும் மெனுவில் Share Screen எனும் தெரிவினை கிளிக் செய்து காண்பிக்கப்பட வேண்டிய திரையின் பரப்பினை தெரிவு செய்யவும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...