வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரையம்பதி கண்ணகியம்மனின் ஆன்மீக இசை பேழை வெளியீட்டு விழா

Report Print Rusath in மதம்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரையம்பதி கண்ணகியம்மனின் சிறப்பைக்கூறும் 'கண்ணகியின் புகழ்பாட வந்தோம்' ஆன்மீக இசை பேழை வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு ஆரையம்பதி இராமகிருஷ்ணமிசன் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கண்ணகித்தாயின் சிறப்புக்கள் அடங்கிய 5 பாடல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது இசைப்பேழை இறுவெட்டானது ஆரையம்பதியை சேர்ந்த சி.ரஞ்சித்குமாரின் தயாரிப்பிலும், ஆரையம்பதியை சேர்ந்த ராஜன் யோகநாதன், தர்மரெட்ணம் மற்றும் ச.ரகுதாஸ் ஆகியோரின் ஏற்பாட்டிலும் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்தா இசை நடன கல்லூரியின் விரிவுரையாளர் க.மோகனதாஸன், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகஸ்தர் த.மலர்செல்வன், மதகுருமார், ஆலய பரிபாலன சபைத்தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்