நிலவில் காலடி பதிக்கும்போது இடம்பெற்ற உரையாடல் ஆடியோவை வெளியிட்டது நாஸா

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

1969 ஜுலை மாதம் நிலாம்ஸ்ரோங் முதலில் நிலவில் காலடி பதித்திருந்தமை அனைவரும் அறிந்த விடயம்.

குறித்த அப்பல்லோ 11 நடவடிக்கையின் போது பூமியின் கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கும், விண்வெளி விரர்களுக்கும் இடையிலான இடம்பெற்ற 19,000 மணித்தியால உரையாடல் கொண்ட ஆடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நாசாவுடன் இணைந்து டெக்ஸா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இவ் ஆடியோவானது கோட்போர்களுக்கு பின்னோக்கி விண்வெளிக்கு பயணிக்கும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கின்றது.

இவ் ஆடியோவில் இரு தரப்பினருக்குமிடையிலான ஒவ்வொரு தனி உரையாடல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நீங்கள் இவ் ஒலி வடிவத்தை தற்போது NASA's Archival Page அல்லது UT Dallas' இணையப்பக்கங்களில் செவிமடுக்க முடியும்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers