16 வயது மகளின் சாவுக்காக காத்திருக்கும் பெற்றோர்! அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் சிறுமி உயிர் பிழைக்க வாய்ப்பிருந்தும் அவர் எப்போது உயிரிழப்பார் என காத்திருக்கும் பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் அவ்ஜிலி கிராமத்தை சேர்ந்தவர் கஞ்சன் குமாரி (16).

அரசுப் பள்ளியில் படிக்கும் இந்தச் சிறுமி, தனியார் பள்ளியில் படிப்பதற்காக சமீபத்தில் தேர்வு எழுதி முதல் இடம் பெற்றார்.

ஆனால் இந்த சூழலில் அவளின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

பின்னர் மருத்துவமனைக்கு சென்ற போது குமாரியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாகவும், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது, சோகமான செய்தி இல்லை. இதன் பிறகு நடந்த சம்பவங்கள் தான் மிகவும் அதிர்ச்சியானவை.

குமாரியின் பெற்றோர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் அவர்களின் ரத்தமும் குமாரியின் ரத்தமும் ஒத்து போனது.

இதையடுத்து இருவரில் ஒருவர் சிறுநீரக தானம் அளித்தால் குமாரியை கப்பாற்றலாம் என தெரியவந்தது. ஆனால் பெற்றோர், அவளுக்கு சிறுநீரகத்தை கொடுக்க மறுத்துள்ளனர்.

இது குறித்து குமாரியின் தந்தை ராமாஷ்ரே யாதவ் கூறுகையில், அவள் ஒரு பெண், அவளுக்கு யார் சிறுநீரகம் கொடுப்பார்கள் என கூறியுள்ளார்.

குமாரியின் தாயும் தன் மகளின் உயிரைக் காப்பாற்ற எந்த ஆர்வமும் காட்டவில்லை, மேலும், அரசிடம் நிதியுதவி பெற்று அறுவைசிகிச்சை செய்ய முடியும் என்ற நிலையில் அவர் அதைச் செய்யக்கூட தயாராக இல்லை.

பெண் என்ற ஒரே காரணத்துக்காக சொந்த மகளின் இறப்புக்காகப் பெற்றோர் காத்திருப்பதாகக் கூறப்படுவது தான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி!

இந்த செய்தி சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் தன்னுடைய சிறுநீரகத்தை குமாரிக்கு தானம் அளிக்க விரும்புவதாக கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்