பெண்ணை கழிப்பறைக்குள் வைத்து பூட்டிய இன்னொரு பெண்.. அடுத்து செய்த செயல்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் கைது செய்யப்பட்ட பெண், காவலரை பெண்கள் கழிப்பறைக்குள் பூட்டி வைத்து விட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் விமலா. இவர் வீடு புகுந்து சிலரை அடித்ததாக பொலிசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து விமலா நீதிமன்றத்துக்கு அழைத்த செல்லப்பட்ட நிலையில் அவரை நான்கு நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் அதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.

இதை தொடர்ந்து சிறைக்கு அழைத்து செல்வதற்கு முன்னர் பெண் காவலர் கோமலா உள்ளிட்ட மூவர் விமலாவை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர்.

அப்போது தான் கழிப்பறைக்கு சென்று சிறுநீர் கழிக்க வேண்டும் என கோமலாவிடம் விமலா கூறினார்.

இதையடுத்து மருத்துவமனையின் பிக்பக்கம் தனியாக உள்ள கழிப்பறைக்கு விமலாவை, பெண் காவலர் கோமலா அழைத்து சென்றார்.

கழிப்பறைக்கு அருகே இரண்டு ஆண்கள் தயாராக இருந்த நிலையில் விமலாவை அழைத்து கொண்டு போக முயன்றனர்.

அவர்களை கோமலா தடுக்க முயன்ற போது விமலா அவரை கழிப்பறைக்குள் தள்ளி பூட்டியதோடு அவரின் செல்போனையும் புடுங்கி வெளியே வீசினார்.

இதன்பின்னர் விமலா உடன் வந்த இருவருடன் தப்பியோடிவிட்டார்.

கழிப்பறைக்குள் மாட்டி கொண்ட கோமலா தன்னை காப்பாற்றுங்கள் என கத்திய போதும் கழிப்பறை தனிமையான இடத்தில் இருந்ததால் யாருக்கும் கேட்கவில்லை.

பின்னர் பலமாக கத்தியபடி கதவை அவர் தட்டியதை கேட்டு அவருடன் வந்த காவலர்கள் கதவை திறந்து கோமலாவை மீட்டனர்.

இதையடுத்து தப்பியோடிய குற்றவாளி விமலாவை பொலிசார் வலைவீசி பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்