உங்கள் ராசியில் சனி, ராகு, கேது ஒன்றாக சஞ்சரித்தால் என்ன செய்ய வேண்டும்?

Report Print Kavitha in ஆன்மீகம்

நாம் பிறந்த நேரத்தை பொறுத்து நமது ஜாதகத்தில் லக்னங்கள், தோஷங்கள் மற்றும் யோகங்கள் இருக்கும். இவைதான் நம் எதிர்காலத்தை அறிய உதவுபவை.

சனிபகவான், ராகு மற்றும் கேது மூவரும் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் போது வாழ்வில் பல மோசமான விளைவுகள் ஏற்படும்.

இதிலிருந்து முழுமையாக தப்பிக்க இயலாவிட்டாலும், இதன் பாதிப்புகளை குறைக்க வழி உள்ளது. அதனை பார்ப்போம்.

மேஷம்

நந்தி யோகத்தை கொண்ட மேஷ ராசிக்கார்களுக்கு வாழ்க்கை முழுவதும் தொழில்ரீதியான பிரச்சினைகள் வந்துகொண்டே இருக்கும். இதனால் அவர்கள் வாழ்வில் ஏற்றங்களும், இறக்கங்களும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். இவர்கள் சனிக்கிழமைகளில் வெள்ளை வினிகர் அல்லது முள்ளங்கியை தானமாக கொடுப்பதன் மூலம் நந்தி யோகத்தின் பாதிப்புகளை குறைக்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கார்களுக்கு நந்தி யோகம் வந்துவிட்டால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும் வயிறு தொடர்பான மோசமான நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இவர்கள் தங்கள் உணவுமுறையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.மேலும் சூரியபகவானுக்கு நீர் வைத்து வழிபடவேண்டும்.

மிதுனம்

நந்தி யோகத்தின் காரணமாக மிதுன ராசிக்காரர்களுக்கு கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். அதுமட்டுமின்றி வாகன விபத்துகள், வாழ்க்கையில் அமைதியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த சூழ்நிலையில் சனிக்கிழமைகளில் அரசமரத்திற்கு கீழே கடுகு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபடவும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு நந்தி யோகம் ஏற்பட்டால் அவர்களின் தனிப்பட்ட வாழக்கை மட்டுமின்றி திருமண வாழ்க்கையிலும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும் இது மனரீதியான குழப்பங்களையும் ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையில் தினமும் காலை சிவபெருமானை தண்ணீர் வைத்து வழிபடவும், முடிந்தால் திங்கட்கிழமைகளில் விரதம் இருக்கவும்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு நந்தி யோகத்தால் கடுமையான உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களுக்கு எலும்பு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். காலை நேரத்தில் சூரிய பகவானுக்கு வெல்லம் வைத்து வழிபடுவது இதன் பாதிப்புகளை குறைக்கும்.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு நந்தி யோகம் ஏற்படுவது அவர்களுக்கு மிகப்பெரிய பண இழப்பிற்கு வழிவகுக்கும். பெரிய கடன்சுமைக்கு ஆளாக நேரிடும். இந்த பிரச்சினைகளை சரி செய்ய நீங்கள் செய்ய வேண்டியது அனுமனை வழிபடவேண்டும். குறிப்பாக அதிகாலையில் வழிப்பவேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு நந்தி யோகம் அவ்வளவு ஏற்றதல்ல. ஏனெனில் இதனால் அவர்களுக்கு கருவூட்டலில் பிரச்சினை, வம்சம் தழைப்பதில் பிரச்சினை போன்றவை ஏற்படலாம். கருச்சிதைவு, மரணம் போன்ற பிரச்சினைகள் ஏற்படகூட வாய்ப்புள்ளது. குழந்தை பிறந்தாலும் அதிலும் பல சிக்கல்கள் இருக்கும். " ஓம் சம் சனீஸ்வராய நமஹ " என்னும் மந்திரத்தை 108 முறை தினமும் கூறினால் இந்த பாதிப்புகள் கொஞ்சம் குறையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சொத்து தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். சொத்துக்கள் வாங்குவதில் பிரச்சினைகள் பெரும்பாலும் ஏற்படும். சிலசமயம் நீதிமன்றத்திற்கு அலைய கூட நேரிடலாம். இதனை சரி பண்ண செவ்வாய்கிழமைகளில் விரதமிருக்கவும், அதேபோல செவ்வாய்கிழமைகளில் அனுமனுக்கு சிவப்பு நிற பூக்களை வைத்து வழிபடவேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு நந்தி யோகத்தால் உறவினர்களுடன் பிரச்சினைகள் ஏற்படலாம், குறிப்பாக உடன்பிறந்தவர்களுடன் பெரிய பிரச்சினைகள் ஏற்படலாம். சனிக்கிழமைகளில் கருப்பு பருப்பை தானம் செய்வது உங்களுக்கு ஏற்படும் பாதிப்பின் அளவை குறைக்கும்.

மகரம்

நந்தி யோகம் காரணமாக மகர ராசிக்காரர்களுக்கு மருத்துவ பிரச்சினைகள் ஏற்படலாம். சிலசமயம் மரணம் ஏற்படும் ஆபத்துகள் கூட ஏற்படலாம். " ஓம் சம் சனீஸ்வராய நமஹ: என்ற மந்திரத்தை தினமும் காலை கூறி சனிபகவானை வழிபடுங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்கார்களுக்கு நந்தி யோகம் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடவும், மர்மமான செயல்களில் ஈடுபடவும் தூண்டும். இது அவர்கள் வாழ்க்கையையே பாதிக்கும். இதனை சமாளிக்க சிவபெருமானிடம் சரணடையுங்கள்.

மீனம்

நந்தி யோகத்தின் காரணமாக மீன ராசிக்கார்களுக்கு பணப்பிரச்சினைகள் ஏற்படும், வழக்கமான ஊதியத்தில் கூட பிரச்சினை ஏற்படலாம். தண்ணீரில் மஞ்சளை கலந்து சூரியபகவானுக்கு வைத்து வழிபடுங்கள். அதேசமயம் சனிக்கிழமைகளில் கடன் வாங்குவதையோ, கொடுப்பதையோ தவிருங்கள்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers