பெரும் சத்தம் கேட்டது... மருமகன்- மகன் இறந்துட்டாங்க! இலங்கை குண்டு வெடிப்பில் கண்ணீர் விட்டு கதறிய தந்தை

Report Print Santhan in இலங்கை

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தன்னுடைய மருமகன் மற்றும் மகனை இந்த சம்பவத்தினால் பறிகொடுத்துவிட்டேன் என்று கண்ணீர் விட்டு கதறி அழுகும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாட்டில் அடுத்தடுத்து என எட்டு வெடிகுண்டு தாக்குதலால் இதுவரை 207- பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலால் இலங்கை மக்கள் முற்றிலும் நிம்மதியை இழந்து தவித்து வருகின்றனர்.

400-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையிலும், இறந்து கிடந்தவர்களில் சிலர் அடையாளம் தெரியாததால், அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று இந்த சம்பவத்தை நேரில் கண்ட சிலரிடம் பேட்டி எடுத்துள்ளது. அப்போது அதில் ஒருவர் நாங்கள் மிகப் பெரிய சத்தம் ஒன்றை கேட்டோம்.

அப்போது அங்கிருந்த கட்டிடம் சரிந்து கொண்டிருந்தது. இதனால் நாங்கள் அங்கிருந்த குழந்தைகளை பாதுகாக்க ஓடினோம், ஆனால் இந்த சம்பவத்தில் என்னுடைய மருமகன் மற்றும் மகன் இறந்துவிட்டனர் என்று அவர்களின் இழப்பை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுகிறார்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்