இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு: 10 முக்கிய தகவல்கள்

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான சில முக்கிய தகவல்கள்

  • இலங்கையில் கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், சங்கிரில்லா நட்சத்திர ஹொட்டலின் மூன்றாவது மாடி, சின்னமன் கிரான்ட் , கிங்ஸ்பெரி நட்சத்திர ஹொட்டல் தெஹிவளை மற்றும் தெமட்டைகொடை ஆகிய 8 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
  • 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 218 பேர் இறந்துள்ளனர், 452 பேர் படுகாயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • மூன்று இந்தியர்கள் இறந்துள்ளதாக இந்திய தூதரகத்திடம் இலங்கை தேசிய மருத்துவமனை தெரிவித்துள்ளது. லோகாஷினி, நாராயண் சந்திரசேகர் மற்றும் ரமேஷ் ஆகியோர் இறந்துள்ளனர்.
  • இந்த தாக்குதல் குறித்து முன்பே உளவு அமைப்புகளுக்கு தகவல்கள் வந்தன. ஆனால், சுதாரிப்பதற்குள் இந்த தாக்குதல் நடந்தேறிவிட்டன. இது வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்ட தாக்குதல்கள். இனவாத பிரச்சனை ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்தே இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன என்று பாதுகாப்பு இராஜாங்க மற்றும் ஊடக அமைச்சர் ரூவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
  • இந்த சம்பவம் தொடர்பாக தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் தங்கியிருந்ததாக கூறப்படும் வீடொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
  • பாணந்துறை பகுதியில் இன்று மாலை இந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டதாகவும், குறித்த பகுதியில் தற்போது சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
  • இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்த பிறகு அங்கு நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாக இன்றைய தாக்குதல் கருதப்படுகிறது.
  • ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ இலங்கை குண்டுவெடிப்புகளை கண்டித்துள்ளார். "கிறிஸ்தவர்களின் புனித நாளான ஈஸ்டர் அன்று நடத்தப்பட்டுள்ள இந்த கொடிய தாக்குதல் கண்டனத்திற்குரியது. இலங்கைக்கு துணையாக ஐ.நா இருக்கும். புனித இடங்களை மதிக்க வேண்டும்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
  • இலங்கையில் அவசரகால சட்டத்தை அமல்படுத்துவதற்கான தீர்மானம் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை , எதிர்வரும் நாட்களை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் குறித்து கலந்துரையாடப்படும் எனவும் கூறினார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்