இலங்கை குண்டுவெடிப்பு- தமிழக அமைப்புக்கு தொடர்பா? Times Of India வெளியிட்டுள்ள செய்தி

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னணியில் தாவீத் ஜமாத் அமைப்பு இருக்குமா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் 8 இடங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 290 பேர் உயிரிழந்தனர்.

இலங்கையில் நடந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், உளவுத்துறை அதிகாரிகள் தமிழ்நாட்டில் கணிசமான அளவில் காணப்படும் தாவீத் ஜமாத் என்ற அமைப்பு தாக்குதல்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதுவதாக Times Of India செய்தி வெளியிட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு

அதே நேரத்தில் இலங்கை தேசிய தாவீத் ஜமாத் இதுபோன்ற தொடர் குண்டு வெடிப்பு நடத்துவது இயலாத காரியம் எனவும் கருதப்படுகிறது.

தாவீத் ஜமாத்தின் செயல்பாடுகள் இலங்கையின் கிழக்கு பகுதியில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், தேசிய தாவீத் ஜமாத் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக பத்து நாட்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டது முக்கிய விடயமாகும்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்