கொழும்பில் அத்துமீறி நுழைந்த ட்ரோன் கமெரா: உஷார் நிலையில் கடற்படையினர்

Report Print Deepthi Deepthi in இலங்கை

கொழும்பில் அத்துமீறி நுழைந்த ட்ரோன் கமெராவை சுட்டு வீழ்த்த முடியாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு - ஜாவத்தை இடையே வானில் ட்ரோன் ஒன்று பறந்துள்ளது. பொலிசார் துப்பாக்கியால் அதனை சுட்டுவீழ்த்த முயற்சித்தபோது அந்த ட்ரோன் பம்பலப்பிட்டி நோக்கி பறந்தது.

அதனை கைப்பற்றும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் அந்த ட்ரோன் கடலை நோக்கி சென்றுவிட்டது. இதனால் கடற்படையினர் முழு அளவில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி நடந்த தற்கொலை குண்டு தாக்குதலை தொடர்ந்து ட்ரோன் கமெராக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்