கம்போடியா மீது தடைகளை விதிக்க வேண்டாம்: சுவிட்சர்லாந்துக்கு கோரிக்கை

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
83Shares
83Shares
lankasrimarket.com

கம்போடியா மீது தடைகளை விதிக்கவோ அல்லது அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவோ வேண்டாம் என சுவிட்சர்லாந்தில் வசிக்கும் கம்போடியா நாட்டைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் அதிபர் Alain Bersetக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

சமாதானம், நிலைத்தன்மை மற்றும் கம்போடியாவில் முன்னேற்றம் என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த கடிதத்தில் 70 பேர் கையெழுத்திட்டுள்ளனர். சுவிஸ் அரசு கம்போடியாமீது ஏதேனும் தடைகளை விதித்தால், கம்போடியா பயங்கரமான பொருளாதார பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

குறைந்த வருவாய் உடையவர்களும் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளவர்களான கம்போடிய விவசாயிகளுமே அதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டில் எந்த பத்திரிகை சுதந்திரத்திற்கும் தடை இல்லை என அந்த கடிதம் குறிப்பிட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு அந்த நாட்டு அரசு 30 ரேடியோ ஸ்டேஷன்களை கட்டாயப்படுத்தி மூடியது குறிப்பிடத்தக்கது.

உண்மை நிலவரங்களை அறிய ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று விரைவில் கம்போடியா செல்ல இருக்கிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்