சுவிட்சர்லாந்து இளைஞரை திருமணம் செய்ய உள்ள அஜீத் பட நடிகை

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
492Shares
492Shares
ibctamil.com

பிரேசிலைச் சேர்ந்தவரும், தமிழில் அஜீத்துடன் நடித்தவருமான நடிகை புருனா அப்துல்லா, சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ய உள்ளார்.

பிரேசில் நாட்டு மொடல் புருனா அப்துல்லா, தமிழில் அஜீத்தின் ‘பில்லா-2’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரும், சுவிஸைச் சேர்ந்த அல் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி, இந்த ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இதுதொடர்பாக, புருனா அப்துல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் புருனாவின் காதலர், அவருக்கு எதிர்பாராத விதமாக மோதிரம் ஒன்றை கொடுத்து தனது காதலை வெளிப்படுத்துகிறார். புருனா அதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்.

இதுகுறித்து புருனா கூறுகையில், ’என்னுடைய காதலர் என்னை ஒரு இளவரசியைப் போல நடத்துகிறார். நான் இந்த உலகின் அதிர்ஷ்டமான பெண். என் கனவாக உள்ள காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்