சுவிஸில் தொடங்கிய உலகின் பிரம்மாண்ட திரைப்பட விழா

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
124Shares
124Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மாண்ட திரைப்பட விழாவான 'Locarno Film Festival' தொடங்கியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் பிரம்மாண்ட அளவில் 'Locarno Film Festival' எனும் திரைப்பட விழா பொதுவெளியில் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.

கடந்த 1946ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த விழாவில், நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் திரையிடப்படும். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா இன்று தொடங்கியுள்ளது.

இன்று முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை, சுமார் 293 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன. 12 பிரிவுகளில் இந்த படங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு இரவும் சுமார் 8,000 பார்வையாளர்கள் இதில் பங்குபெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஆண்டிற்கு 200 திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இதுபோன்ற திரைப்பட விழாக்களின் மூலமாகவே சுவிஸ் திரைப்பட கலைஞர்களை உலகிற்கு காட்ட முடியும் என்று கூறப்படுகிறது.

சுவிஸில் உள்ள நகரங்களில் பத்து இடங்களில் இந்த திரைப்பட விழா நடைபெற உள்ளது. இதற்கான கட்டணம், ஒருநாளைக்கு 52 முதல் 56 வரையிலான சுவிஸ் பிராங்குகள் என்ற அளவில் வசூலிக்கப்படுகின்றன.

Reto Albertalli/AFP

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்