சுவிஸ் இணையவாசிகளை மொத்தமாக உலுக்கிய சம்பவம்: வலுக்கும் எதிர்ப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வெளியாகி மொத்த மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சூரிச்-ஓர்லிகான் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையம் ஒன்றில் குறித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

அதில் ஊனமுற்ற ஒரு நபரை ஒருவர் சரமாரியாக தாக்குகிறார். எட்டி மிதிக்கிறார். வலி தாங்க முடியாமல் அந்த நபர் தரையில் ஊர்ந்து செல்கிறார்.

அவரது முகம் முழுவதும் ரத்தம் வழிந்தபடி உள்ளது. இச்சம்பவம் நடக்கும்போது ரயில் பயணிகளான பொதுமக்கள் கடந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை வெளியாகவில்லை. இரண்டு தினங்களுக்கு முன்னர் இணைய பயன்பாட்டாளர் ஒருவர் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அன்று முதல் பல ஆயிரக்கணக்கான மக்கள் அந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

பலர் அந்த வீடியோ பார்த்து அனுதாபப்பட்டனர். ஆனால் சிலர், ஒருவர், அதுவும் ஊனமுற்றவர் கொடூரமாக தாக்கப்படுகிறார், அந்த நிலையில் அவருக்கு உதவாமல் எவரேனும் அதை படம் பிடிப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது இந்த வீடியோ சூரிச் நகர பொலிசாரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை குற்றவியல் நடவடிக்கையாக விசாரிக்க சூரிச் பொலிசார் முடிவு செய்துள்ளனர். மேலும், இந்த வீடியோவை வெளியிட்டவர் அந்த சம்பவம் தொடர்பில் வேறேதும் தகவல்களை பகிரவும் இல்லை என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்