எல்லையை திறந்துவிட்ட சுவிற்சர்லாந்து: ஆனால் இந்த நாடுகளுக்கு மட்டும்

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து

பெரும்பாலான நாடுகளுக்கு சுவிட்சர்லாந்து தன்னுடைய எல்லையை திறந்துவிட்டுள்ள நிலையில், இனிவரும் வாரங்களில் வருபவர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வருகிற 20ம் திகதியிருந்து சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலிருந்து மக்கள் வர அனுமதிக்கப்படுவார்கள்.

எனினும் அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

  • 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது கண்டிப்பான முறையில் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும்.
  • புகைரத வண்டி, பேருந்து, டிரக், மெட்ரோ, ஸ்கை லிப்ட், கப்பல் அல்லது படகு என எதில் பயணித்தாலும் மாஸ்க் அணிவது கட்டாயம்.
  • Vaud மற்றும் Jura நகரங்களில், பத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கடைகளில் இருக்கும் போது மாஸ்க் அணிவது கட்டாயம்.
  • Aargau மற்றும் Solothurnன் இரவுநேர விடுதிகளில் 100 லிருந்து 300 பேருக்கு மட்டும் அனுமதி, அவர்களும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
  • Valais மற்றும் Lucerne நகரங்களில் இரவுவிடுதியில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு 8 மணிக்கு மேல் அனுமதி இல்லை, உள்ளே நுழையும் முன் அனைவரும் தங்களை பற்றிய தகவல்களை நிச்சயம் தெரிவிக்க வேண்டும்.
  • மக்கள் அனைவரும் பொது இடங்கள், கடைகள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் 1.5 மீற்றர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

பாதுகாப்பான நாடுகளிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

Algeria, Australia, Canada, Georgia, Japan, Morocco, New Zealand, Rwanda, South Korea, Thailand, Tunisia and Uruguay and the EU states outside the Schengen area (Bulgaria, Ireland, Croatia, Romania and Cyprus)

ஆனால் பாதுகாப்பாற்ற நாடுகளிலிருந்து வருபவர்கள் 10 நாட்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், தவறினால் 10,000 பிராங்க்குகள் அபராதமாக விதிக்கப்படும்.

Argentina, Armenia, Azerbaijan, Bahrain, Belarus, Bolivia, Brazil, Cabo Verde, Chile, Dominican Republic, Honduras, Iraq, Israel, Qatar, Colombia, Kosovo, Kuwait, Moldova, North Macedonia, Oman, Panama, Peru, Russia, Saudi Arabia, Sweden, Serbia, South Africa, Turks and Caicos Islands and the United States.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்