14 வயது சிறுவன் உருவாக்கிய கணினி வைரஸால் உலகளவில் பாரிய பாதிப்பு

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

2017 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் BrickerBot எனும் மல்வேர் ஆனது உலக அளவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது .

இந்த மல்வேரை உருவாக்கியவர் Light Leafon என அறியப்படும் 14 வயது சிறுவன் ஆகும்.

இது அக் காலப் பகுதியில் புதுடெல்லியின் MTNL புரேட்பேண்ட் வலையமைப்பினை ஸ்தம்பிக்க செய்திருந்ததுடன் 60,000 BSNL மொடம்களையும் பாதிப்படையச் செய்திருந்தது.

அத்துடன் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளையும் குறித்த வைரஸ் பாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் சிறுவனை பிரபல தொழில்நுட்ப செய்தித்தளம் ஒன்று நேர்காணல் செய்துள்ளது.

இதன்போது அவர் பாரிய அழிவை ஏற்படுத்தும் பொருட்டு குறித்த மல்வேரினை உருவாக்கியிருந்தார் என்பதை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Silex எனும் மல்வேர் BrickerBot மல்வேரை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...