மனைவியுடன் உறவுக்கொண்ட கணவனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

Report Print Peterson Peterson in பிரித்தானியா
1171Shares
1171Shares
lankasrimarket.com

பிரித்தானிய நாட்டில் வயது குறைந்த மனைவியுடன் உறவுக்கொண்ட கணவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ரோமானியா நாட்டை சேர்ந்த 25 வயதான வாலிபர் ஒருவர் 12 வயதான சிறுமியை திருமணம் செய்துள்ளார்.

பின்னர், மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் இருவரும் பிரித்தானிய நாட்டில் குடியேறி எஸ்ஸக்ஸ் நகரில் வசித்து வந்துள்ளனர்.

கர்ப்பிணியான தனது 12 வயது மனைவியுடன் அவர் அடிக்கடி உறவு வைத்துக்கொண்டுள்ளார்.

இவ்விவகாரத்தை பொலிசார் கடந்த ஏப்ரல் 7-ம் திகதி கண்டுபிடித்துள்ளனர்.

பிரித்தானிய நாட்டு சட்டப்படி 13 வயதிற்கு குறைவான சிறுமியுடன் அவர் அனுமதியுடனும் உறவுக்கொள்வது சட்டப்படி குற்றமாகும்.

இதனை தொடர்ந்து கணவரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நபரிடம் விசாரணை நடத்தியபோது அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் தண்டனை கிடைத்தாலும், சிறையில் இருந்து விடுதலையாகி மீண்டும் தனது மனைவியுடன் உறவை தொடருவேன் என பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாலிபர் மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, வயது குறைவான மனைவியுடன் உறவுக்கொண்ட குற்றத்திற்காக அவருக்கு நீதிபதி 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

கணவனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய மனைவி தற்போது தாய்நாடான ரோமானியாவிற்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்