வருங்கால இளவரசி மெர்க்கலின் உருக்கமான அறிக்கை

Report Print Fathima Fathima in பிரித்தானியா
497Shares
497Shares
lankasrimarket.com

பிரித்தானியா இளவரசர் ஹரி- மெர்க்கலின் திருமணம் வருகிற 19ம் திகதி கோலாகலமாக நடக்கிறது.

இதற்காக மக்கள் படுஜோராக தயாராகி வரும் வேளையில், இன்று ஒத்திகை நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் மெர்க்கலின் தந்தை திருமண நிகழ்வில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் திடீர் மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் நிகழ்வில் பங்கேற்க இயலாமல் போனதாம்.

இதுகுறித்து மெர்க்கல் வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கையில், துரதிஷ்டவசமாக எனது தந்தை திருமண நிகழ்வில் பங்கேற்க மாட்டார்.

எப்போதும் என் தந்தையின் உடல்நலனில் அக்கறை கொண்டவள் நான், இந்நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை கெசிங்டன் மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்